ETV Bharat / bharat

பீகார் திருமணங்களில் ஹை டிமாண்டாக இருக்கும் 'ஹெலிகாப்டர் கார்’... - பீகார் மாநிலம்

பீகார் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள கார் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பீகார் திருமணங்களில் ஹை டிமாண்டாக இருக்கும் ஹெலிகாப்டர் கார்

author img

By

Published : Nov 14, 2022, 12:15 PM IST

கைமூர்: ஆடம்பரம் மற்றும் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் திருமணங்களின் மீது எப்போதும் இந்தியர்களுக்கு ஓர் ஆர்வம் உண்டு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பீகாரில், கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், மணமக்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வடிவில் மாற்றியமைக்கப்பட்ட காரைப் பயன்படுத்தி வருகின்றனர். இது பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஹெலிகாப்டர் போன்று உள்ள இந்த காரை, எட்டு மாதம் கடினமாக உழைத்து கைமூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வேகன் ஆர்(wagon r) காரை இவ்வாறு மாற்றி வடிவமைத்துள்ளனர். இது நிஜ ஹெலிகாப்டரில் இருப்பதைப் போலவே ரெக்கைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் “துல்ஹான் சாலி சசுரல்” என உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறது.

கைமூரை சேர்ந்த சந்தீப் குமார் என்னும் நபர் இந்த காரை திருமண நிகழ்வுகளுக்கு வாடகைக்கு அளித்து வருகிறார். இதனை மக்கள் முன்கூட்டியே தங்கள் வீட்டு விஷேஷங்களுக்கு முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த கார் கைமூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ரோஹட்ஸ், போஜ்பூர் மற்றும் பக்சர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து திருமணத்திற்காண ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

இந்த காரை பற்றி அறிந்து, இதனை நல்ல முதலீடாக கருதிய மும்பையைச் சேர்ந்த அமர்நாத் குமார் குப்தா காரை ரூ.7 லட்சத்தில் வாங்கி, ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் வாடகைக்கு விட உள்ளார். நவம்பர் 25-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்றும், மற்ற மாவட்டங்களில் இருந்து பெறப்படும் ஆர்டர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குப்தா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் நில அதிர்வு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.