ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி, லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாநில சுகாதார அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் உரையைற்றி அவர், " மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ‘ஹப் மற்றும் ஸ்போக்’ எனப்படும் மையம் மற்றும் ஆரங்கள் மாதிரியைப் பின்பற்ற வேண்டும். தொலை தொடர்பு மையங்கள் அதிகளவில் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2.6 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இ-சஞ்சீவனி சேவைகளை வழங்க முடிந்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெற முடியும். இந்த மையங்கள் 24X7 என்ற நிலையில் எப்போதும் செயல்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதிசெய்து, பொது மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.
தேசிய வழிகாட்டுதல்களின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திறமையாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: Republic Day: 15,000 அடி உயரத்தில் தேசிய கொடியை பறக்கவிட்ட எல்லை வீரர்கள்