ETV Bharat / bharat

ஐசிஎம்ஆரில் 'தேசிகன் பவன்' ஆராய்ச்சிக் கட்டடம் திறப்பு! - Union Health Minister

டெல்லி: ஐசிஎம்ஆரில் 'தேசிகன் பவன்' என்ற புதிய ஆராய்ச்சி கட்டடத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்துவைத்தார்.

Harsh Vardhan
ஹர்ஷ் வர்தன்
author img

By

Published : Mar 6, 2021, 8:32 PM IST

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) ஜல்மா நிறுவனத்தில், கோவிட் -19 பாதிப்பைக் கண்டறியும் வசதி கொண்ட 'தேசிகன் பவன்' என்ற புதிய ஆராய்ச்சி கட்டிடத்தைத் திறந்துவைத்தார்.

இந்த ஆராய்ச்சி கட்டடத்தில் ஒரேநாளில் 1200 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஆராய்ச்சிக்குத் தேவையான பல ஹைடேக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

விழாவில் பேசிய அமைச்சர், "கரோனா தொற்று காலத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சிறப்பாகப் பணியாற்றியது. இந்நிறுவனம் அதிகரிக்கும் தொற்று நோய்களைத் தடுப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் தொடர்ந்து உதவுகிறது.

மேலும், வரும் 2025-க்குள் காசநோயைப் பாதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சிகிச்சை மூலம் கட்டுக்குள் கொண்டுவந்திட முடியும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 100ஆவது நாளில் போராட்டம்: கேஎம்பி ஜிடி சாலையை 5 மணி நேரம் முடக்கிய விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.