மும்பை: அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை அமைச்சருமான தனஞ்செய் முண்டே டெல்லி சென்று உள்ளார். அதேநேரம், ஜப்பானில் உள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மற்றும் அகமது நகர் ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய அரசு வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளது. இதன் மூலம் வெங்காயமானது, குவிண்டால் வீதம் கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ‘X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
மேலும், இது தொடர்பான அவரது வலைதளப் பதிவில், “இன்று நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை தொலைபேசி மூலம் ஜப்பானில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, மத்திய அரசு 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவெடுத்து உள்ளது.
-
महाराष्ट्रातील कांदा उत्पादकांच्या प्रश्नासाठी आज आमचे नेते केंद्रीय गृहमंत्री मा. अमितभाई शाह तसेच केंद्रीय मंत्री मा. पियुष गोयलजी यांच्याशी जपानमधून दूरध्वनीवर संपर्क केला.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
केंद्र सरकारने 2 लाख मेट्रिक टन कांदा खरेदी करण्याचा निर्णय घेतला असून महाराष्ट्रातील कांदा उत्पादकांचे…
">महाराष्ट्रातील कांदा उत्पादकांच्या प्रश्नासाठी आज आमचे नेते केंद्रीय गृहमंत्री मा. अमितभाई शाह तसेच केंद्रीय मंत्री मा. पियुष गोयलजी यांच्याशी जपानमधून दूरध्वनीवर संपर्क केला.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 22, 2023
केंद्र सरकारने 2 लाख मेट्रिक टन कांदा खरेदी करण्याचा निर्णय घेतला असून महाराष्ट्रातील कांदा उत्पादकांचे…महाराष्ट्रातील कांदा उत्पादकांच्या प्रश्नासाठी आज आमचे नेते केंद्रीय गृहमंत्री मा. अमितभाई शाह तसेच केंद्रीय मंत्री मा. पियुष गोयलजी यांच्याशी जपानमधून दूरध्वनीवर संपर्क केला.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 22, 2023
केंद्र सरकारने 2 लाख मेट्रिक टन कांदा खरेदी करण्याचा निर्णय घेतला असून महाराष्ट्रातील कांदा उत्पादकांचे…
அது மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் வெங்காய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் முனைப்பில், மாநிலத்தின் நாசிக் மற்றும் அகமது நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு கொள்முதல் மையங்கள் அமைக்கவும் அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வெங்காயம் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 410 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். இது மாநிலத்தில் உள்ள வெங்காய உற்பத்தியாளர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்” என தெரிவித்து உள்ளார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “கடந்த சில நாட்களாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) ஆகியவை நாசிக் மற்றும் லசால்கவுன் ஆகிய பகுதிகளில் இருந்து 3 லட்சம் வெங்காயம் கொள்முதல் செய்ததை நாம் அறிந்து இருப்போம்.
வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால் நாட்டில் தேவைக்கேற்ப வெங்காயம் கிடைக்கிறது. இன்று காலை 11 மணி முதல் என்சிசிஎஃப் மற்றும் என்ஏஎஃப்இடி ஆகியவை நாசிக், பிம்பால்கவுன், லசால்கவுன், அகமது நகர் மற்றும் இதர வெங்காயம் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக கொள்முதல் செய்ய உள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் அதிகமாக கொள்முதல் செய்யப்படும்.
என்சிசிஎஃப் மற்றும் என்ஏஎஃப்இடி ஆகியவை மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் உள்பட வெங்காயம் உற்பத்தி ஆகும் பல்வேறு மாநிலங்களில் இருந்து உரிய விலைக்கு வெங்காயம் கொள்முதல் செய்ய இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, வெங்காயம் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 410 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘காய்கறிகளின் சீரான விலையை உறுதி செய்ய தொலைநோக்கு திட்டம் தேவை’ - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!