டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 23) ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 3 மாநிலங்களில் 22 வகை 'டெல்டா பிளஸ்' கரோனா