டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அர்ஜூன் முண்டா, தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதேபோன்று கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் பிரிவினருக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு - கர்நாடக அரசு அறிவிப்பு!