புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் உள்ளிட்ட ஐந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தநிலையில், அங்கு காங்கிரஸ் கூட்டணியின் பலம் 13ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆகவும் இருந்தது.
இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 3 கிலோ தங்க காணிக்கை கொடுத்த தேனி பக்தர்!