சண்டிகர்: பாட்டியாலாவில் வசிக்கும் இளம்பெண் கர்ப்பமாக இருந்தபோது, அதே நகரைச் சேர்ந்த தம்பதியினர் அப்பெண்ணின் குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தத்தெடுப்பு செயல்முறைக்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் தம்பதியினர் பூர்த்தி செய்துள்ளனர். எனவே, அந்தத் தம்பதிகள் தங்களின் தத்தெடுக்கப்பட்ட குழந்தையாகக் கருதப்படும் அந்தப் பெண்ணின் குழந்தையைப் பிறந்த பிறகு பெற்றுக்கொண்டனர்.
இருப்பினும் குழந்தை தனது வயிற்றில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு ஆதரவாக, தனது குழந்தையின் பதிவுச்சான்றிதழ் எதுவும் இல்லை என்பதைச்சுட்டிக்காட்டி, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு அப்பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, கருவில் இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிக்கும் சட்டம் இந்து தத்தெடுப்புச்சட்டத்தில் இல்லை என்று கூறியது. குழந்தையுடன் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் எதுவும் இணைக்கப்படாததால், குழந்தையை உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க:பிரதமரிடம் விருது பெற்ற விருதுநகர் ஆட்சியர்..