உக்ரைன், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் மூலம் ஆதரிப்பதற்காக எலொன் ம்ஸ்க் முன்னெட்டுப்பு நடவடிக்கை எடுத்திருக்கும் இன்நிலையில் கோடீஸ்வரரான அவருக்கு, முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலைக்குள் சிக்கியுள்ள உக்ரேனிய தளபதி செர்ஹி வோலினா மற்றும் அந்த நகரத்தின் மற்ற பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்களை மீட்ககூறி எலான் ம்ஸ்க்கிடம் உக்ரேனிய தளபதி செர்ஹி வோலினா ட்விட்டர் பதிவின் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
சாத்தியமற்றதும் நடக்கும்: அசோவ்ஸ்டலில் உயிர்வாழ்வது "சாத்தியமற்றது" என்று வோலினா கூறியுள்ளார், மேலும் அவரையும் சிக்கியுள்ள மற்றவர்களையும் காப்பாற்றவும் அசோவ்ஸ்டலில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறும் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்தார். நான் வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் சாத்தியமற்றதும் நடக்கும் என்று மக்களுக்கு காட்டுங்கள். அசோவ்ஸ்டலில் இருந்து மத்தியஸ்த நாட்டிற்குச் செல்ல எங்களுக்கு உதவுங்கள்." என வோலினா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கள் ட்விட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் பெரும்பாலானோர் அவரது கருத்துக்களை ட்விட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன பலரும் அந்த டிவிட்டர் பதிவை டெஸ்லாவின் தலைமை அதிகாரியுடனும் பகிர்ந்து வருகின்றனர்.
நீங்கள் இல்லையென்றால் யார்?அசோவ்ஸ்டலில் சிக்கிய உக்ரேனிய போராளிகளை மீட்ககோரி அவர் வெளியிட்ட பதிவில் அவர்களை மீட்க எலன் மஸ்க் ஆல் மட்டுமே முடியும் என்பது போன்ற நம்பிகையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டின் இறுதி வரியில், "நீங்கள் (எலோன் மஸ்க்) இல்லையென்றால், யார்? (யாரால் உதவ முடியும்)எனக்கு ஒரு குறிப்பைக் கொடுங்கள்" என்று அவர் குறிப்பிட்டது மிகவும் உணவுப்பூர்வமாக பார்க்கப்படுகிறது.
உக்ரேனிய தளபதி தனது உயிருக்காகவும் மற்ற உக்ரேனிய போராளிகள் சார்பாகவும் வேண்டுகோள் விடுப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து வெளியேற உதவுமாறு அனைத்து உலகத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ்வின் கடைசி வேண்டுகோள்: அவர் வெளியிட்ட அந்த விடியோ பதிவில் "எங்களுக்கு உதவுமாறு அனைத்து உலகத் தலைவர்களிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். நாங்கள் அனைவரும் மரியுபோல் இராணுவப் படையின் வீரர்கள், 500 க்கும் மேற்பட்டோர் இங்கு காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர்.எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். "இதுவே உலகிற்கு எங்களின் கடைசி வேண்டுகோள். இதுவே எங்களது வாழ்வின் கடைசி வேண்டுகோளாக இருக்கலாம். மணிநேரங்கள் இல்லாவிட்டாலும் நமது கடைசி நாட்களை நாம் எதிர்கொள்கிறோம். எதிரிகள் எங்களை விட அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்" என்று அவர் தனது வீடியோ செய்தியில் கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ