டெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் கரோனா வைரஸ் பரவலால் ரத்து செய்யப்பட்டது.
வரும் ஏப்ரல் 26ஆம் தேதி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தார். அப்போது அவர் சென்னைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக பிரிட்டன் குழு சென்னைக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்திருப்பதாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.