டெல்லி: நாடு முழுவதும் டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் 4 பல்கலைகழகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த போலி பல்கலைகழகங்களுக்கு எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் கிடையாது என்று மாணவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்
- டெல்லி: 8
- கர்நாடகா : 1
- கேரளா : 1
- மகாராஷ்டிரா : 1
- மேற்கு வங்கம் : 2
- உத்தரப் பிரதேசம் : 4
- ஒடிசா : 2
- புதுச்சேரி : 1 Sree Bodhi Academy of Higher Education (ஶ்ரீ போதி அகாதமி ஆப் ஹையர் எஜுகேஷன்)
- ஆந்திரப் பிரதேசம் : 1
இதையும் படிங்க: ராகுலின் குழந்தைத் தனம்... வருத்தப்பட்ட குலாம் நபி...