ETV Bharat / bharat

எனக்குத் திறமை இல்லை என்று சொன்னால் ராஜினாமா செய்யத்தயார் - உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரா

'சிவசேனாவின் கட்சித்தொண்டர்கள் கூறினால், கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன்' என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

எனக்கு திறமை இல்லை என்று சொன்னால் ராஜினாமா செய்ய தயார்- உத்தவ் தாக்கரே

author img

By

Published : Jun 22, 2022, 10:17 PM IST

மும்பை: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஃபேஸ்புக் லைவ் மூலம் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை விட்டு வெளியேறாது. கட்சித்தொண்டர்கள் இன்று என்னவாக இருந்தாலும் அதற்குக்கட்சி தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை என சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பைக்கு வந்து என்னைப் பார்த்து கூறினால், நான் ராஜினாமா செய்யத் தயார். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல.

2019ஆம் ஆண்டு மூன்று கட்சிகளும் ஒன்றாக வந்தபோது, நான் தான் முதலமைச்சர் பொறுப்பை எடுக்க வேண்டுமென சரத்பவார் கேட்டுக்கொண்டார். அதன் பேரில், நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். சரத்பவாரும், சோனியா காந்தியும் என் மீது நம்பிக்கை வைத்தனர்.

பாலாசாகேப் தாக்கரே காலத்திலிருந்த சிவசேனா இன்று இல்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். சிவசேனா, "இந்துத்துவா"வை விட்டு வெளியேறப்போவதில்லை. சிவசேனா முன்வைக்கும் மந்திரம் இதுதான், இதைத்தான் பாலாசாகேப் தாக்கரே நமக்குக் கொடுத்துள்ளார்.

சிவசேனாவின் கட்சித்தொண்டர்கள் கூறினால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன். ஆனால், அதை பிறர் கூறக்கூடாது. எனக்கு எதிராக ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களித்தாலும் அது எனக்கு இழப்புதான்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குருத்வாரா தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவிக்கும் சீக்கியர்களை மீட்க எஸ்ஜிபிசி உதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.