ETV Bharat / bharat

நான்கரை நாள் வேலை செய்தால் போதும்; ஐக்கிய அரபு அமீரகம் - ஐக்கிய அரபு அமீரகம்

வாரத்தில் 4½ நாள்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

uae-government-announces-reduction-of-working-hours

author img

By

Published : Dec 8, 2021, 3:47 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாள்களாகவும், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருக்கிறது.

அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் இதையே பின்பற்றுகின்றன.

இந்நிலையில், தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாள்கள் 6இல் இருந்து 4½ நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மேற்கத்திய நாடுகளை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாள்கள் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் புனித நாளாக கருதப்படுவதால் அன்று ½ நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.

உலகளவில் 5 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாள்களை வேலை நாள்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2000 ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்தது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.