ஆந்திரா: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், வெமுலாமடா கிராமத்தில் கமலா, நாகமணி ஆகிய இரண்டுப் பெண்களைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு பூனை கடித்துள்ளது. பூனை கடித்ததற்கு இருவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி டிடி ஊசியைப் போட்டுள்ளனர்.
இதையடுத்து, சரியாக இரண்டு மாதம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) அன்று கமலா, நாகமணி இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கமலா மங்களகிரியில் உள்ள என்ஆர்ஐ மருத்துவமனையிலும், நாகமணி விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரேபிஸ் தாக்கி பலி
இருப்பினும், நேற்று முன்தினம் (மார்ச் 5) அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி கமலாவும், காலை 10 மணியளவில் நாகமணியும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் பூனை கடித்த பின்னர், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரு பெண்களையும் கடித்த பூனை, நாயால் கடிபட்டு சிறிது நாள்களிலேயே உயிரிழந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, நாய், பூனை, எலி, பாம்பு போன்றவையால் தாக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!