ETV Bharat / bharat

சொத்தை பிரித்தால் தான் இறுதிசடங்கு - கணவனின் இறுதிசடங்கில் பிரச்சனை செய்த மனைவிகள்

தெலங்கானாவில் இறந்த கணவரின் உடலை வீட்டில் வைத்துவீட்டு, இரண்டு மனைவிகள் சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவு செய்ய தாசில்தார் அலுவலகம் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சொத்தை பிரித்தால் தான் இறுதிசடங்கு - கணவனின் இறுதிசடங்கில் பிரச்சனை செய்த மனைவிகள்
சொத்தை பிரித்தால் தான் இறுதிசடங்கு - கணவனின் இறுதிசடங்கில் பிரச்சனை செய்த மனைவிகள்
author img

By

Published : Jul 9, 2022, 9:11 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில், அய்லாபூரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்த மமிதாலா நரசிம்ஹுலு, உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

நரசிம்முலுவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். நரசிம்முலுவின் மரணத்தின் போது, ​​அவரது முதல் மனைவி அவருடன் இருந்தார். அவரது உடல் ஐதராபாத்தில் இருந்து கொருட்லாவுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்குகள் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நரசிம்முலு இறந்த தகவலறிந்த இரண்டாவது மனைவி பாரதி, கணவரை கடைசியாக பார்க்க முதல் மனைவி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிலிருந்த முதல் மனைவியிடம், நரசிம்ஹுலுவின் இரண்டாவது மனைவியான பாரதி, கணவனின் சொத்தில் தனக்குப் பாதிப் பங்கு வேண்டும், என கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.

அங்கிருந்த உறவினர்களும் மற்றவர்களும் சமாதானப்படுத்த முயன்றும், அவர் செவிசாய்க்காமல் இறுதிச் சடங்கை நிறுத்தினார். பின்னர் கணவரின் சொத்தை பிரிக்கும் விவகாரத்தில், இருவர் தரப்பிலும் பெரியவர்கள், உறவினர்கள் தலையிட்டு, மூன்று ஏக்கர் விவசாய நிலம் தருவதாக இரண்டாவது மனைவியிடம் கூறியுள்ளனர்.

அதன் பிறகும் நரசிம்முலுவின் இரு மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நிலத்தை பதிவு செய்யும் வரை இறுதி சடங்கு செய்ய மாட்டோம் என தெரிவித்தனர். பின்னர் உறவினர்கள் நரசிம்முலுவின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்தனர்.

மனைவிகள் இருவரும் கணவரின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு கதலாப்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர். முதல் மனைவி பெயரில் இருந்த மூன்று ஏக்கர் விவசாய நிலம் இரண்டாவது மனைவியின் பெயருக்கு மாற்றப்பட்டதையடுத்து வீட்டுக்கு வந்து கணவரின் இறுதிச் சடங்கை முடித்தனர்.

இதையும் படிங்க: Gay Ashram : தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான முதல் ஆசிரமம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.