தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று (ஏப்.14) ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்கான சோபியான் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
முன்னதாக, குல்காம் மாவட்டத்தில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சுரீந்தர் குமார் சிங் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது!