ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்: இரண்டு ‘R’கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது - ராகேஷ் திகாயத் வேளாண் சட்டப் போராட்டம்

ரிஹானாவின் ட்வீட் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து உலக கவனத்தை ஈர்த்ததாக தெரிகிறது. "நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை?!" என்று பாடகி தனது 101 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு ட்விட்டரில் பதிவிட்டார். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் அனைத்து வழிகளையும் முயற்சித்தாலும், உலகளாவிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடக பதிவுகளால், சில கணக்குகள் தடுக்கப்பட்டாலும், ஏற்பட்ட எதிர்வினையை தடுக்க முடியவில்லை.

Farmers' protest
Farmers' protest
author img

By

Published : Feb 7, 2021, 2:52 PM IST

ஹைதராபாத்: பாப் சூப்பர் ஸ்டார் ரிஹானா செவ்வாயன்று மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் குடியரசு தின வன்முறைக்குப் பின்னர் அதன் நம்பகத்தன்மையை இழந்ததாகத் தோன்றிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை விட தற்கொலை செய்து கொள்வது மேல் என விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு அறிவித்த பிறகு கிட்டத்தட்ட புத்துயிர் பெற்றன.

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹானாவின் ஒரு ட்வீட் பெரும் ஆதரவை ஈர்த்து, பிற உலகளாவிய பிரபலங்கள் இணைந்ததைப் போலவே, திகாயத்தின் கண்ணீர் வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி அடுத்த சில மணி நேரத்தில், மீரட், ஹப்பூர், முசாஃபர்நகர், ஷாம்லி மற்றும் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள், மேற்கு உ.பி. காசிப்பூர் எல்லையை அடைந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் சேர சாலையில் குவிந்தனர்.

ஜனவரி 27ஆம் தேதி காவல்துறை மற்றும் CRPF ஆகியவை போராட்டக்காரர்களை அந்த இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் வெறிச்சோட தொடங்கிய காசிப்பூர் போராட்ட களம், நள்ளிரவுக்குள் மீண்டும் உற்சாகமடைந்த விவசாயிகளையும் ஆதரவாளர்களையும் கண்டது. போராட்டத்தைத் தணிக்க, அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ரேஸர் கம்பி, கனமான உலோக தடுப்புகள், பாறை அடுக்குகள் மற்றும் வரிசையான கான்கிரீட் தடுப்புகள் ஆகியவை காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டன. விவசாயிகள் முன்னேறுவதைத் தடுக்க கான்கிரீட் பலகைகள் சாலைகளுக்கு குறுக்கே வைக்கப்பட்டது மட்டுமல்லாது ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் அமரக்கூடாது என்பதற்காக ஆணிகளும் பதிக்கப்பட்டன.

இருப்பினும், இரண்டு R, ராகேஷ் திகாயத் மற்றும் ரிஹானா, அரசாங்கத்தின் திட்டங்களை முற்றிலுமாக முறியடித்து ஒரு தீர்வை எட்ட கட்டாயப்படுத்தியது. ரிஹானாவின் ட்வீட் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து உலக கவனத்தை ஈர்த்ததாக தெரிகிறது. "நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை?!" என்று பாடகி தனது 101 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு ட்விட்டரில் பதிவிட்டார்.

ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் அனைத்து வழிகளையும் முயற்சித்தாலும், உலகளாவிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடக பதிவுகளால், சில கணக்குகள் தடுக்கப்பட்டாலும், ஏற்பட்ட எதிர்வினையை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து நடந்தவை மிகவும் அசாதாரணமானது:, தற்போதைய விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த கருத்துக்களுக்காக வெளிநாட்டு நபர்களையும் நிறுவனங்களையும் கண்டித்து வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் தங்கள் திட்டங்களை அமல்படுத்த அந்த குழுக்கள் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அமைச்சகம், இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் பிரச்சினைகள் குறித்து சரியான புரிதல் வேண்டும். பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துகளின், குறிப்பாக பிரபலங்கள் மற்றும் பிறரால் கூறப்படும் போது, ​​அவை சரியானதாகவோ அல்லது பொறுப்பாகவோ இல்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் இரண்டு சமூக ஊடக ஹேஷ்டேக்குகளும் இருந்தன: “#IndiaTogether” மற்றும் “#IndiaAgainstPropaganda”, பின்னர் பெரும்பாலான இந்திய பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டது. பல இந்திய பிரபலங்கள் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையைப் பற்றி பதிவிட்டனர், எந்தவொரு பரப்புரையையும் மக்கள் நம்பக்கூடாது என்று வலியுறுத்தினர்.

ரிஹானாவின் ட்வீட்டிற்குப் பிறகு, சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் மருமகள் வழக்கறிஞர்-எழுத்தாளர் மீனா ஹாரிஸ் ஆகியோரும் விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

எல்லைகளில் தடைகள் ஏற்படுத்துவது முதல் இணையத்தை முடக்குவது வரை, அரசாங்கம் போராட்டங்களை சமாளிக்க முயன்றது, ஆனால் அது ஏற்கனவே கைவிட்டு போய்விட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசாங்கங்களை பற்றி எழும் கருத்துக்களுக்கு அந்நாடுகள் எந்த எதிர்வினையும் செய்யாதபோது, இந்த விவகாரத்தை சமாளிப்பதற்கு பதிலாக தனிநபரின் கருத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற விமர்சனம் மக்களிடையே எழுந்துள்ளது.

அமைச்சகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் அதில் துல்லியம் இல்லாததற்கு வருத்தப்படுகிறேன். இது வெளிப்படையாக வேறெங்கோ தயாரிக்கப்பட்டு ஒருசில அறிவுறுத்தல்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என ஓய்வு பெற்ற தூதர் கே.சி.சிங் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை பற்றி ட்வீட் செய்ததுள்ளார்

பல பார்வையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இது இந்தியாவின் "உள் விஷயம்" என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விமர்சித்தனர். அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான தவ்லீன் சிங் "மியான்மரில் நடந்த சதித்திட்டத்தை இந்திய அரசு கண்டனம் செய்தால் அது அந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகாதா? ரிஹானாவுக்கு எதிராக நேற்று பேசிய இந்திய பிரபலங்கள் தங்களை தாங்களே இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்." என்று கூறினார்

சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து நிலைமை இன்னும் மோசமானது, ஆனால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை உருவாக்கியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை தெளிவுபடுத்தியது. இந்த பின்னடைவு, ட்வீட்டுகளுக்கு அரசு விரைவான பதில் அளிப்பது தேவையா என்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத வன்முறை சம்பவங்கள், CAA மற்றும் NRC போன்ற சட்டங்கள், மாணவர்கள் மீதான தேசத் துரோக வழக்குகள் குறித்து இந்தியா உலகளாவிய விமர்சனங்களை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில், விவசாய ஆர்ப்பாட்டங்களை உலகளாவிய தலையீடு இல்லாமல் நிச்சயமாக செய்திருக்க முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.