பெலுரு: கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தின் பெலுரு தாலுகாவில் கடேகர்ஜே கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானையின் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள தனியார் காபி எஸ்டேட்டில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிக்கய்யா (65), எரைய்யா (68) ஆகிய இருவரும் காபி எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பு அக்கிராம மக்களிடைய பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கடேகர்ஜே கிராம மக்கள் தெரிவிக்கையில், காட்டு விலங்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், அந்த காட்டு யானையை உடனே காட்டுப்பகுதிக்கு துரத்த வேண்டும் எனவும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; விமானி உயிரிழப்பு