ETV Bharat / bharat

ஹைதராபாத் ஐந்து நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்துகொண்ட இருவர் - crime news in tamil

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில், இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TWO PEOPLE COMMIT SUICIDE IN A HOTEL IN HYDERABAD
ஹைதராபாத் ஐந்து நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்துகொண்ட இருவர்
author img

By

Published : May 15, 2021, 10:56 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இன்று காலையில் இருந்து அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், அவர்கள் உணவு எதையும் ஆர்டர் செய்யாததால் சந்தேகமடைந்த தங்கும் விடுதிப்பணியாளர்கள் பஞ்சகுடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த காவலர்கள், விடுதியின் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்குமார்(34), ஷியமளாதேவி(36) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களின் தற்கொலைக்குத் திருமணத்தை மீறிய உறவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...உதவிக்கு அழையுங்கள்:

SUICIDE helpline
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

இதையும் படிங்க: குடும்பத்தகராறு காரணமாக கணவன் - மனைவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.