புதுச்சேரி:Omicron spreads: புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பெரும் தொற்றானது தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் ஒவ்வொரு பகுதியிலும் வீதி வீதியாகச் சென்று, தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரியில் முதன்முதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 80 வயது முதியவரானப் புதுச்சேரி ராஜா திரையரங்கு சதுக்கத்தில் வசிப்பவருக்கும், புதுவை லாஸ்பேட்டையில் உள்ள 20 வயது பெண் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம் தேவையா..?:
மேலும் அவர் கூறுகையில், ”ஒமைக்ரான் தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் புதுச்சேரியில் பிரத்யேக மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டு 600 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதையடுத்து மாநில எல்லைகளில் தீவிர மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் இருக்குமா என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தென் மாநிலங்களில் எங்கும் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாத நிலையில், புதுச்சேரியில் மட்டும், அரசாங்கம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இதன் காரணமாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் புதுச்சேரி வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் தேவையில்லை என மாநில சுகாதாரத்துறை எண்ணுகிறது”என்றார்.
தொடர்ச்சியாக புதுச்சேரி அரசுக்கு, மாநில சுகாதாரத்துறை புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி பரிந்துரை செய்யவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை?