தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெர்மைன் பகுதியில், இன்று (அக் 18) அதிகாலை முதல் பயங்கரவாதிகள் கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம்சாகர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களை மீட்ட பாதுகாப்பு படையினர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர் என காஷ்மீர் மண்டல காவல்துறை தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இதனிடையே, கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இம்ரான் பஷீர் கனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி - 3 பேர் கைது!