தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு கிரிப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
முன்னதாக பாதுகாப்புப்படையினருக்கு பயங்கரவாதிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு ராணுவமும் சிபிஆர்எஃப் வீரர்களும் இணைந்து பயங்கரவாதிகள் மறைந்திருந்த பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப்படையினர் தேடுதலில் ஈடுபட்ட உடனேயே பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலைத்தொடங்கினர்.எனவே, பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதலைத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து தேடுதல் பணி என்கவுன்ட்டராக மாறியது.
அதில் இரண்டு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கிடைத்த தகவலின்படி அந்தப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் மறைந்து இருந்திருக்கல்லாம் என்றும், நாள் கணக்கில் அப்பகுதியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காஷ்மீர் போலீஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில் என்கவுன்ட்டர் சம்பவம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே டூரு கிரி பகுதியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குமரி டூ காஷ்மீர்: ராணுவம் குறித்த விழிப்புணர்வுப் பயணம்!