ETV Bharat / bharat

அலகாபாத், தெலங்கானா நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

author img

By PTI

Published : Nov 14, 2023, 8:03 AM IST

Madras High Court judges: உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் மாற்றம்

டெல்லி: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்படி, 5 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து மத்திய அரசு நேற்று (நவ.13) அறிவித்துள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • In the exercise of the power conferred by the Constitution of India, the President of India, after consultation with the Chief Justice of India, is pleased to transfer the following High Court Judges. I convey my best wishes to them:- pic.twitter.com/BBpbDTE6JS

    — Arjun Ram Meghwal (@arjunrammeghwal) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளனர். இடம் மாற்றப்பட்ட நீதிபதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதன்படி,

  • அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் பி சரஃப் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கும் மற்றும் நீதிபதி பிபேக் சவுத்ரி பாட்னா உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மற்றும் நீதிபதி சி சுமலதா கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பணியின்போது உயிரிழந்ததால் வாரிசுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க திருவண்ணாமலை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.