ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்: இருவர் கைது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படை
பாதுகாப்பு படை
author img

By

Published : Mar 26, 2021, 4:17 PM IST

ஜம்மு காஷ்மீரின் லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறை கைதுசெய்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை இயக்குநர் விஜய் குமார் கூறுகையில், "இந்த வழக்கை காவல் துறையினர் தீர்த்துவிட்டனர். நேற்று நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இரண்டு களப்பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கார் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த நதீம் அப்ரார் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். கடந்த மார்ச் 24ஆம் தேதி, நதீம், ஜாவேத் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று நோட்டமிட்டுள்ளனர்.

நதீமின் நெருங்கிய உறவினர்தான் மிர். தாக்குதலை மேற்கொள்வதற்காக நதீம், இரண்டு வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு மிர் மற்றும் ஷேக் ஆகியோர் உதவி செய்துள்ளனர்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.