ETV Bharat / bharat

மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு பெண் சிறுத்தைகள் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 20, 2023, 8:02 PM IST

ராஜஸ்தானில் கனமழையின்போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் சிறுத்தைகள் உயிரிழந்தன. ஆறு வயது பெண் சிறுத்தையும், அதன் குட்டியும் உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Two
Two

ராஜசமந்த்: ராஜஸ்தான் மாநிலம், ராஜசமந்த் மாவட்டத்தில் உள்ள குந்த்வா கிராமத்தில் நேற்று(மார்ச்.19) இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இப்போது புயல் காற்று காரணமாக மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு பெண் சிறுத்தைகள் வெளியே வந்தன. எதிர்பாராத விதமாக, தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி, அந்த சிறுத்தைகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சிறுத்தைகள் துடிதுடித்து இறந்தன.

சிறுத்தைகள் இறந்தது குறித்து அப்பகுதி மக்கள் தியோகர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தைகளின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ராஜேந்திர சிங் சுந்தாவத் கூறும்போது, "உயிரிழந்த இரண்டு பெண் சிறுத்தைகளில் ஒன்றுக்கு ஆறு வயது, மற்றொன்றுக்கு இரண்டு வயது. 11 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின்கம்பி உடைந்து விழுந்ததில் பெண் சிறுத்தையும், அதன் குட்டியும் பலியானது. சிறுத்தைகள் உணவு அல்லது குடிநீரைத் தேடி வெளியே வந்திருக்கலாம், அவை துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டன.

பலத்த காற்று வீசியதால் மின் கம்பி துண்டிக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டோம். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சிறுத்தைகளின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு மாவட்டத்தில் அமைகிறது 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' - பட்ஜெட்டில் அறிவிப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.