மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும், கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் அமல்படுத்தியதில் இருந்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வந்தது.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி, இந்தச் சட்டங்களுக்கு எதிராக இரண்டு கோடி பேரிடம் கையொப்பம் பெற்றது.
இந்த கையொப்பங்கள் அடங்கிய பேப்பர் பண்டல்களை இரண்டு லாரியில் ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் அனுப்பி வைத்தனர். இன்று (டிச.24) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒப்படைக்கவுள்ளனர்.
இதையும் படிங்க...குளத்தின் சுற்றுச்சுவரைச் சீரமைக்க ரூ.7.99 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி