அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமுற்றனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பதுங்குக்குழி அமைந்துள்ளது. இந்தப் பதுங்குக் குழி மீது நேற்றிரவு 7 மணி அளவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது குறி தவறி கையெறி குண்டுகள் சாலையில் விழுந்தன.
இந்தநிலையில் சாலையில் பயணித்த இரண்டு பேர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.