இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி தொடர்பான பல போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் நிலையில், அவற்றை மத்திய அரசு தீவிரமாகக் கண்கானித்துவருகிறது. தடுப்பூசி தொடர்பான போலி தகவல்களை நீக்க வேண்டும் என, முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியது. இதற்கு ட்விட்டர் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
அதில், கோவிட்-19 தொடர்பாக போலி தகவல்கள், புரளிகள், உண்மைக்குப் புறம்பான பதிவுகளை நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு கோவிட்-19 தொடர்பான உண்மை தகவல்களை மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் நோக்கம் என விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட் நமது பொறுமையைச் சோதிக்கிறது - பிரதமர் மோடி கவலை