இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அனைத்து முன்னணி சமூக வலைதளங்களும் பின்பற்ற வேண்டும் என அரசு நீண்ட நாள்களாக அறிவுறுத்தி வருகிறது.
இதில் குறைதீர்ப்பு அலுலவரை நியமிப்பதில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கும் அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விதிமுறைகளை மீறும்பட்சத்தில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, அரசு விதிமுறைகளின்படி எட்டு வாரத்திற்குள் இந்தியாவை சேர்ந்த ஒருவரை புகார் அலுலவராக நியமிக்க ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்தது.
இந்நிலையில், புதிய புகார் அலுலராக வினய் பிரகாஷ் என்பவரை ட்விட்டர் இந்தியா நிறுவனம் நியமித்துள்ளது. இவரை grievance-officer-in@twitter.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாரம்பரிய டாய் ரயில்