நாட்டின் தலைநகர் டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும்விதமாக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தி கலைக்க முயற்சித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.
"ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்பது நம்முடைய முழுக்கமாக இருந்த நிலையில், பிரதமரின் ஆணவப்போக்கால் விவசாயிகளுக்கு எதிராக ராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் என ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு, ஒரு புகைப்படத்தை அவர் இணைத்திருந்தார்.
-
Rahul Gandhi must be the most discredited opposition leader India has seen in a long long time. https://t.co/9wQeNE5xAP pic.twitter.com/b4HjXTHPSx
— Amit Malviya (@amitmalviya) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rahul Gandhi must be the most discredited opposition leader India has seen in a long long time. https://t.co/9wQeNE5xAP pic.twitter.com/b4HjXTHPSx
— Amit Malviya (@amitmalviya) November 28, 2020Rahul Gandhi must be the most discredited opposition leader India has seen in a long long time. https://t.co/9wQeNE5xAP pic.twitter.com/b4HjXTHPSx
— Amit Malviya (@amitmalviya) November 28, 2020
ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படம் பொய்யாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்று என பாஜக சமூக வலைதள அணி தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அமித் மால்வியா வெளியிட்ட புகைப்படம் உண்மைக்குப் புறம்பாக உள்ளது என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக பொய்யான செய்தி வெளியிட்டுள்ளதை ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் பொய்யான செய்திகளை வெளியிடும் பாஜகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ட்விட்டர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.