மலப்புரம்: 'பெண்கள் தனியாக பயணம் செய்யலாம் (Women can travel alone)' என்ற வாசகத்துடன், பாலக்காட்டில் உள்ள ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த அருணிமா எனும் 23 வயது பெண் 22 நாடுகளுக்கு தனியாக சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார்.
இந்தப் பயணம் குறித்து அருணிமா கூறுகையில், “முதலில் சொந்த ஊரிலிருந்து சைக்கிளில் மும்பை சென்று பின்னர் மும்பையிலிருந்து ஓமனுக்கு விமானம் மூலம் செல்வேன். ஓமனில் இருந்து, மற்ற நாடுகளுக்கு தனது முழு சைக்கிள் பயணத்தைத் தொடங்க உள்ளேன். செல்லும் இடங்களில், என்ன தங்கும் வசதி கிடைத்தாலும் அங்கு தங்கிக்கொள்ளும் யோசனையில் உள்ளேன்.
இந்த நாடுகளில் தனியாக பயணம் செய்யும்போது, எனக்கு காத்திருக்கும் பல ஆபத்துகளை நன்கு அறிவேன். இருப்பினும், தனியாக அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் தனியாகப் பயணிக்கும் போதெல்லாம் இதுபோன்ற ஆபத்துகளையும் அனுபவங்களையும் சந்திக்க நேரிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அருணிமா தனது பயணத்தை இன்னும் இரண்டு வருடங்களில் முடித்துவிடுவார் எனவும்; அவரது பெற்றோர் அவரது இந்த முயற்சிக்கு முழு ஆதரவை வழங்குகின்றனர், எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாலை டம் டம்... மங்கள டம் டம்... இந்திய மருமகள் ஆன அமெரிக்கப்பெண்