டெல்லியில் மண்டவாலி பகுதியில் வசிக்கும் சந்தீப் என்ற இளைஞர், பிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இலவசமாக டியூஷன் எடுத்துவருகிறார். இந்நிலையில், மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க, ஊசி ஒன்றையும் வழங்கி வந்துள்ளார். இதனை, மாணவர்கள் தினந்தோறும் மறைமுகமாக எடுத்துக்கொண்டிருந்த சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தை ஊசி எடுத்துக்கொள்வதைப் பார்த்த பெற்றோர், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், யூடியூப்பில் என்.எஸ். ஊசியை மாணவர்கள் போட்டுக்கொண்டால் ஞாபக சக்தி வளரும் என்பதை பார்த்ததாக சந்தீப் கூறியுள்ளார். தற்போது, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும், ஊசி எடுத்துக்கொண்ட மாணவர்களின் உடல்நிலை காவல் துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!