ETV Bharat / bharat

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன? - பிரனாய் ராய் கருத்து - 2021 தேர்தல் செய்திகள்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான பதிவை மூத்த பத்திரிகையாளர் பிரனாய் ராய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Prannoy Roy
Prannoy Roy
author img

By

Published : May 2, 2021, 4:10 PM IST

இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலானா கூட்டணி முன்னணியில் உள்ளது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் அதிக கவனம் பெற்றது மேற்கு வங்கம். காரணம், அங்கு மம்தாவின் கோட்டையை பாஜக எப்படியாவது தகர்த்துப் பார்க்க வேண்டும் என அனைத்துவிதமாகவும் உழைத்தது.

ஆனால், 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்கிறார் மம்தா பானர்ஜி.

இந்த முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரனாய் ராய் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய வரலாற்றில் முக்கியத் தடத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் பதித்துள்ளன. கூட்டாட்சித் தத்துவத்திற்கு மக்கள் எழுச்சியைத் தந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிக வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், எந்தவித தேசிய கட்சிகளும் மைய அதிகாரத்தை மாநிலத்தில் செலுத்தவதை வாக்காளர்கள் விரும்பவில்லை.

பிரனாய் ராய் கருத்து
பிரனாய் ராய் கருத்து

இதன்மூலம் வாக்காளர்கள் அழுத்தமாகக் கூற விரும்பும் செய்தி என்னவென்றால், இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒற்றுமையுடன் வாழ்வதே நாங்கள் விரும்புகிறோம் என்பதே ஆகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.