ETV Bharat / bharat

குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் 'துங்கா' நாய்! - கர்நாடக மாநிலம்

கர்நாடகாவில் அண்மையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிக்க துங்கா என்கிற மோப்ப நாய் முக்கியப்பங்கு வகித்துள்ளது.

துங்கா நாய்
துங்கா நாய்
author img

By

Published : Jun 28, 2022, 10:14 PM IST

தாவணகெரே: கர்நாடக மாநிலம் , தாவணகெரே டவுன் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 22ஆம் தேதி ஆண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஹொன்னாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த நிலையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க 'துங்கா' என்ற மோப்ப நாயை போலீசார் பயன்படுத்தியுள்ளனர். குற்றச் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு நாயை அழைத்துச்சென்று போலீசார் மோப்பம் பிடிக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த நாய் அருகே வசித்து வந்த ஹரீஷ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 'குற்றவாளி ஹரீஷ் கொலை செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பிய பின் உடைகளை மாற்றிவிட்டு குளித்து உள்ளார். துங்கா நாய் சரியாக மோப்பம் பிடித்து ஹரீஷ் குளித்த இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றது. அங்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து ஹரீஷ் தான் குற்றவாளி’ என உறுதிப்படுத்தியதாக கூறினர்.

துங்காவை கடந்த 2009இல் இருந்து போலீசார் குற்றச் சம்பவங்களை கண்டறிய பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 70 கொலை மற்றும் 35 கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துங்கா உதவிகரமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் திடுக்கிடும் ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.