சென்னை: திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு டிசம்பர் 18ஆம் தேதி மராடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (டிசம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும் உடல் உறுப்புகள் செயலிழந்துவருகின்றன. கவலைக்கிடமாக இருக்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டுவருகிறார். இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கும், சந்திரமௌலிக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இமாச்சல் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி