திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி, 25 ஆம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் ஆகிய காரணங்களால் இந்த நாட்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
சூரிய மற்றும் சந்திர கிரகணம் நாட்களில் காலை 8.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். தீபாவளியை முன்னிட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், அக்டோபர் 23 ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கிரகணம் நாட்களில் கோயிலில் அனைத்து சிறப்புத் தரிசனங்களும் ரத்து செய்யப்படும். ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாறு கழுகுப் பாதுகாப்புக்குக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை...