ஹைதராபாத்: தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு, முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் சந்திராவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்த கணக்கு ஒன்றிலிருந்து நேற்று (ஜூலை 18) மெசேஜ் வந்தது. அதில், "நான் முக்கியமான மீட்டிங் ஒன்றில் இருக்கிறேன்.
எனக்கு அவசரமாக ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால், என்னுடை டெபிர் கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. உங்களுக்கு எனது அமேசான் பே எண்ணை அனுப்பிகிறேன். அதில் பணத்தை அனுப்புங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பிய அலுவலர் ரூ. 2 லட்சம் பணத்தை அனுப்பினார். இதையடுத்து அந்த எண்ணிலிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அலுவலருக்கு தெரியவந்தது.
உடனே அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் கட்டண மெசேஜ்: அபேஸான அரசு அலுவலரின் ரூ.8.8 லட்சம் மீட்பு - சைபர் கிரைம் போலீசார் அதிரடி!