பலன்பூர் : குஜராத் மாநிலம் பலன்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது டிரக்கை நிறுத்திவிட்டு நமாஸ் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்திய குஜராத் போலீசார், பச்சல் கான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் பலன்பூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கு சாலையில் ஒரு டிரக் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதன் அருகில் ஒருவர் சாலையில் தொழுகை மேற்கொள்வது போல் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், இது குறித்து போலீசாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், பொது வெளியில் குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக பச்சல் கான் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : நடுத்தர மக்களை திருப்திபடுத்துமா இடைக்கால பட்ஜெட்? என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்?