பெங்களூரு: கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தில் லாரியும் தனியார் பேருந்தும் நேற்று (மே. 23) நள்ளிரவில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயத்துடன் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேஷ்னல் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
லாரி MH 16 AY 6916 என்ற எண்ணுடைய மகாராஷ்டிரா வாகனம் என்றும், தனியார் பேருந்து KA 51 AA 7146 என்ற எண்ணுடைய கர்நாடக வாகனம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சார்தாம் யாத்திரை: பக்தர்கள் உயிரிழப்பு 62ஆக அதிகரிப்பு!