ETV Bharat / bharat

திரிபுரா ஜெகநாதர் தேர் விபத்து... பிரதமர் மோடி நிவாரணம்... விசாரணை நடத்த உத்தரவு!

ஜெகநாதர் ரத யாத்திரையின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி மாநில மின்சாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

author img

By

Published : Jun 29, 2023, 8:12 PM IST

Tripura
Tripura

அகர்தலா : திரிபுராவில் ஜெகநாதர் ரத யாத்திரையின் போது உயர் மின் அழுத்த கம்பியில் ரதம் உரசி 6 பேர் உயிரிழந்த கோர விபத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி மாநில மின்சாரத் துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் உத்தரவிட்டு உள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

திரிபுரா மாநிலம் உனாகோடி மாவட்டம் குமார்காட் பகுதியில் ஜெகநாதர் ஆலய திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ரத யாத்திரையின் போது, ரதம் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் இந்த கோர விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பின் உண்மைத் தன்மையை வெளியிடாமல் போலீசார் மறைத்து வருவதாகவும் முதலில் கூறப்பட்டது.

காலை முதலே பலத்த மழை பெய்து வந்த நிலையில், உல்டோ ரத யாத்திரை நடைபெற்றதாகவும் இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். உல்டோ ரத யாத்திரையின் போது பக்தர்கள் தேர் இழுத்து முன்னோக்கி சென்ற நிலையில், உயர் மின்னழுத்த கம்பி மீது தேர் உரசியதில் இந்த கோர விபத்து அரங்கேறி உள்ளதாக போலீசார் கூறினர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த திரிபுரா மாநில மின்சாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரத்தன் லால் நாத் தன் ட்விட்டர் பக்கத்தில், " மின்சார விபத்து சம்பவத்தால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இதுபோன்ற இக்கட்டான காலங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு துணை நிற்கும். மாநில அரசு மற்றும் திரிபுரா மாநில மின்சார கழகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்கும்.

நான் அலுவலக வேலைக்காக வெளியூர் சென்றதால் குமார்காட் வர முடியவில்லை என்றாலும், உள்ளூர் எம்.எல்.ஏ பகபன் சந்திர தாஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பேசி நிலைமை குறித்து அறிந்தேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மின்சார விபத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடியா - ராகுல் காந்தியா... மக்களே தீர்மானிப்பார்கள் - அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.