திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக மாணிக் சாஹா முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் 11 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். 2016 ஆம் ஆண்டு மாணிக் சாஹா காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தார். கடந்த சனிக்கிழமை திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் பிப்லாப் தெப் மற்றும் அவரது கீழ் உள்ள அமைச்சர்கள் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியளித்தது.
தற்போதைய முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா பதவியேற்றதும், முன்னாள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மேவர் குமார் ஜமாத்தியாவைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் 12 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை முழு பலத்துடன் புதிய அமைச்சர்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஜமாத்தியாவுக்குப் பதிலாக மற்றொரு எம்எல்ஏ பிரேம் குமார் ரியாங் நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் காலியாக இருந்த மற்றொரு இடம் ஜமாத்தியாவுக்குச் சென்றது.
பழங்குடியனர் அமைச்சர் பதவி பெற்ற பிரேம் குமாரை சேர்த்து பாஜகவிற்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முன்னதாக முதலமைச்சராக இருந்த பிப்லாப் தெப்பும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆளும் கட்சியில் முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஆன பல் மருத்துவர்.. யார் இந்த மாணிக் சஹா!