டெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு திருணமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் போராட்டம் நடத்தினார்.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசுவது ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திருணமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அவர் போராட்டம் நடத்தி, மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.
பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசஸ் என்ற உளவுச் செயலியை அரசுகளுக்கு மட்டுமே விற்பது என்று அந்நாடு முடிவுசெய்திருக்கிறது. அந்தச் செயலி இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது என்று 2019ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதுபோல பல நாடுகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கெனத் தனியே புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டன. அதனடிப்படையில் இப்பொழுது சுமார் 50 ஆயிரம் தொலைபேசி எண்கள் பெகாசஸ் செயலியால் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மோடி அரசின் கீழ் பொறுப்பில் உள்ள 2 அமைச்சகர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என 300 நபர்களின் மொபைல் குறிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மறைக்கப்பட்ட கரோனா மரணங்கள் 10 மடங்கு அதிகம்: வெளியான அதிர்ச்சித் தகவல்