தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி, 14 வயது பழங்குடியின சிறுமியின் உடல் மரத்தில் தொங்க விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அர்மன் அன்சாரி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன்பின் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டதும் தெரியவந்தது. அதோடு உயிரிழந்த சிறுமி கருவுற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை, போக்சோ, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அர்மன் அன்சாரியை கைது செய்தனர்.
தும்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த சில வாரங்களிலேயே அதே பகுதியில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:மரண தண்டனை கொடுங்க... தும்கா சிறுமியின் இறுதி வாக்குமூலம்...