டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள் திடீரென குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். திடீர் குலுக்கத்தால் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் நேற்று நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தான் இந்த சக்தி வாந்த நில நடுக்கம் ஆணிவேர் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத்தில் 7 புள்ளி 7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக தலைநகர் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப்பகுதியில் உள்ள பைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏறபட்டதாகவும், அது ரிக்டர் அளவில் 6 புள்ளி 8 என்ற அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற ஆசிய நாடுகளான துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் உணரப்பட்ட இந்த நில நடுக்க ஏறத்தாழ 2 நிமிடங்கள் வரை இருந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நில நடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்தன. நற்காலி, கட்டில், உள்ளிட்ட பொருட்கள் நகர்ந்தன. திடீர் நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக ஷாகர்பூர், கான் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் நிலநடுக்கம் உணர்ந்ததை அடுத்து தெருவில் தஞ்சம் புகுந்ததாக நடிகை குஷ்பு ட்விட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் டெல்லி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், சுமார் 4 நிமிடம் வரை நிலநடுக்கம் நீடித்த நிலையில் மின் விசிறிகள், விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் அசைந்ததாகவும், இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்ததாக நடிகை குஷ்பூ தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா பகுதியில் நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 9 பேர் வரை உயிரிழந்த்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளாது.
கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். தொடர் மீட்பு பணிகளால் உயிர் சேதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீதிகளில் திரண்ட மக்கள்!