ETV Bharat / bharat

தொடரும் விவசாயிகளின் போராட்டம் - கோடிக்கணக்கில் இழப்பு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தினால் வணிகர்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம்
author img

By

Published : Dec 22, 2020, 7:16 PM IST

தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் வணிகர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர் என அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.

14,000 கோடி ரூபாய் இழப்பு

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த 26 நாள்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் வணிகர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். நான் ஒன்றுக்கு, 50 ஆயிரம் அண்டை மாநில டிரக்குகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு செல்லும். அதேபோல், டெல்லியிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு 30 ஆயிரம் டிரக்குகள் செல்லும். தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தால், இதுமாதிரியான 20 விழுக்காடு டிரக்குகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் தற்போதைக்கு பற்றாக்குறை இல்லை

இவை அனைத்தும் உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்பவையாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்பிரச்னையை உடனடியாக தீர்க்க கோரிக்கை விடுக்கிறேன் என பிரவீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "டெல்லியில் தற்போதைக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், அடுத்த 15 முதல் 20 நாள்களில் இன்னலை சந்திக்க நேரிடும். விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வு இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து தீர்ப்பை உடனடியாக வழக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.