ETV Bharat / bharat

தனியார் ரயில் சேவை - ரயில்வே அமைச்சருக்கு டி ஆர் பாலு கடிதம்

மத்திய அரசின் பொது ரயில் சேவையை, தனியார்மயம் ஆக்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோவை- ஷீரடி தனியார் ரயில் சேவை- ரயில்வே அமைச்சருக்கு டி ஆர் பாலு கடிதம்

author img

By

Published : Jun 16, 2022, 6:56 AM IST

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனித தலமான ஷீரடிக்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் விடுவதற்காக பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பிரதமரின் ‘பாரத் கெளவரவ்’ திட்டத்தின் மூலம் தனியார் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு இந்த ரயில் சேவை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அரசின் ரயில்வே சேவையை தவிர்த்து தனியார் சேவை தொடங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தனியார் சேவை சீரடி செல்லும் பக்தர்களுக்கு சரியான பலனைத் தரப்போவதில்லை. இந்த ரயில் சேவை மூலம் 1,092 பயணிகள் நேரடியாக பலன் அடைவது தடைபடுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பொது ரயில் சேவையை தனியார்மயம் ஆக்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் மத்திய அரசு பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் டிஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தயவு செய்து அமைதி காக்கவும் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அன்பான கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.