திருவனந்தபுரம்: இந்திய கடற்படையின் மதிப்புமிக்க டி-81 கப்பல் தனது 20 ஆண்டு சேவைக்குப் பிறகு ஆலப்புழா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. கப்பற்படையிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட டி-81 கப்பலானது, மும்பையில் இருந்து கொச்சிக்கும், பின்னர் அங்கிருந்து சேர்தலாவுக்கும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், 106 சக்கரங்கள் கொண்ட சூப்பர் டிரக்கில் வைத்து கப்பலானது ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்கா, நீர்முக்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைியல் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. டி-81 கப்பலானது இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியுடன், கோவா கப்பல் கட்டும் தளத்தில் 25 மீட்டர் நீளம், 60 டன் எடையுடன் தயாரிக்கப்பட்டது. இது, 1999ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.
முசிறியின் பாரம்பரிய திட்ட இயக்குநர் நௌசத் பதியத் இதுதொடர்பாக பேசுகையில், "ஆலப்புழா பாரம்பரியத் திட்டத்தின் கீழ் டி-81 கப்பலானது அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது. இது அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கண்டிப்பாக ஆலப்புழாவை நோக்கி ஈர்க்கும்.
ஏற்கெனவே, ஆலப்புழா படகு வீடுகளுக்கு மிகவும் பிரபலமானது. இருப்பினும், படகு வீடுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை டி-81 கப்பல் வெகுவாக கவரும்" என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி வந்த ’சுமேதா’ கடற்படை ரோந்து கப்பல் - பள்ளி மாணவ, மாணவிகள் குதூகலம்