காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதி போர்க்கொடி தூக்கிய ஜி-23 தலைவர்களும் பங்கேற்றனர்.
அத்துடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, சிவசேனாவின் சஞ்சய் ராவத், திருணமூல் காங்கிரசின் டெரிக் ஓபிரைன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மோடி தலைமையிலான அரசை ஒற்றுமையுடன் எதிர்க்க அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக சிங்கங்கள் தினம் - வனவேந்தனை காப்பது நமது கடமை