ஹைதராபாத் : தெலங்கான மாநிலத்தில் கடந்த 15ஆம் தேதி 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது மாநில பொது சுகாதார இயக்குநர் ஜி ஸ்ரீனிவாஸ் ராவ், முதல்வரின் பாதங்களை மரியாதை நிமித்தமாகத் தொட்டு ஆசி பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியானது.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அதிகாரிகள் முதல்வரின் பாதங்களைத் தொடும் போக்கு நல்ல ரசனையாக இல்லை என பாஜக முன்னாள் எம்எல்சி என் ராமச்சந்தர் ராவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அரசியலுக்கு வருவதை புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன் ஒரு மூத்த அதிகாரி இதே போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், அவருக்கு எம்எல்சி பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுகாதார அதிகாரிக்கு "பிங்க் நிற சட்டை" வழங்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குஜராத் சட்டப்பேரவை தேர்தல்... காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல்