ETV Bharat / bharat

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 மணி செய்திச் சுருக்கம், TOP 10 NEWS 9AM
9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM
author img

By

Published : Jun 12, 2021, 9:18 AM IST

1. மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நீர் திறந்து வைக்கிறார்.

2. ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கு அனுமதி, எவற்றிற்கு அனுமதி இல்லை!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எவற்றிற்கு அனுமதி, அனுமதியில்லை என்பதை இச்செய்தியில் காண்போம்

3. ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, ஜி-7 உச்சி மாநாட்டில் இன்றும் நாளையும் (ஜூன் 12,13) காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்.

4. இன்று 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூன் 12) 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

5. பாஜகவிலிருந்து இன்னும் ஏராளமானோர் வரவுள்ளனர் - மம்தா நம்பிக்கை

இன்னும் ஏராளமானோர் பாஜகவிலிருந்து விலகி திருணமூல் காங்கிரசில் இணைவார்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

6. டேட்டா பத்தல... கோவாக்சினை பயன்படுத்த அமெரிக்கா மறுப்பு

கோவாக்சின் தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

7. 'முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும்'

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரத்தை முழுமையாக மாநில அரசுகளுக்கே வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறிவருகிறார்.

8. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9. 'சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்க' - சீமான் கண்டனம்

திருச்சியில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரை காவல் துறை கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

10. நாட்டை காக்கும் நிகிதா!

“நீ என்னை காதலிப்பதாக பொய் சொல்வாய்... உண்மையில் நாட்டைத்தான் நீ காதலித்தாய், மக்களுக்காக நீ உனது உயிரையே கொடுத்துள்ளாய், உன்னை நான் இறுதி மூச்சுள்ள வரை விரும்புவேன். என்னகாக யாரும் ஆதங்கப்படவேண்டாம் எனக் கூறுவேன். பதிலாக அவர்களை உனக்கு வீரவணக்கம் செலுத்தவே நான் சொல்வேன்”- எல்லையில் வீரமரணத்தை தழுவிய மேஜர் விபூதி சங்கர் தோந்டியாலின் மனைவியான நிகிதாவின் வார்த்தைகள் இது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.